ஆரம்பகட்டத்தில் வீட்டுமனை வாங்குவதன் நன்மைகள்
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்"
இந்த பழமொழியை கேட்டுள்ளீர்களா? உங்கள் ஆசிரியரோ அல்லது உங்கள் நலம் விரும்பியோ ஒரு மேற்கோள் காட்டி, நீங்கள் பலன்களைப் பெறுவதற்கு ஒரு ஆலோசனையை உங்களுக்கு வழங்கி இருக்கலாம்.
ஆம், அவர்கள் சொல்வது சரிதான். பழம் பழுக்கும் போது நீங்கள் அதை நீங்கள் பறித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நீங்கள் முன்பே அதன் புத்துணர்ச்சியையும் சுவையையும் அனுபவிக்க முடியும்.
நீங்கள் நிலம் அல்லது வீடு வாங்குவதில் முதலீடு செய்யத் தயாராக இருக்கும்போது இந்த எடுத்துக்காட்டு பொருந்தும். நீங்கள் பல எண்ணிக்கையிலான தளங்களை கூகுள் போன்ற வலை தளங்களில் தேடி சிலவற்றை பார்வையிட்டிருக்கலாம்.
இன்றைய நாளுக்கு அருகில் தொடங்கப்பட்ட வீட்டுமனை
இடங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அவ்விடங்களை சென்று பார்வையிடுங்கள்.
நீங்கள் எங்களிடம் கேட்கலாம், நீங்கள் ஏன் அவ்விடங்களை மீண்டும் பார்வை இட்டு அவர்களிடமிருந்து ஒரு வீட்டுமனையோ அல்லது ஒரு வீடோ வாங்க வேண்டும்?
கீழே உள்ள நன்மைகள், நீங்கள் ஒரு வீட்டுமனையை அதன் துவக்க கட்டத்தில் வாங்கும்போது நீங்கள் பெறலாம்.
தேர்ந்தெடுக்க பல இடங்கள்:
ஆரம்ப கட்டத்தில், ஒரு வீட்டுமனை இடம் அதிகபட்சமாக ஆக்கிரமிக்கப்படாமல் விற்பனைக்கு இருக்கும். நீங்கள் தேர்வுசெய்து முடிக்க உங்களுக்கு ஏராளமான விருப்பங்கள் இருக்கும்.
நீங்கள் விரும்பும் முகம், உங்களுக்குத் தேவையான தளத்தின் பரப்பளவு மற்றும் சரியான தேர்வைத் தேர்ந்தெடுப்பது போன்ற காரணிகளின் அடிப்படையில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கும் நல்லதொரு வாய்ப்பு உங்களுக்கு அமையும்.
ரியல் எஸ்டேட் டெவெலப்பர்களோ அல்லது பில்டர்களோ உங்கள் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியாது, மேலும் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
டயமண்ட் சிட்டி, குளோபல் சிட்டி மற்றும் ஆரஞ்சு நகர வீட்டுமனைகள் போன்ற எங்களின் புதிய ஸ்டார்ட்-அப் திட்டங்கள் இப்போது உங்களின் சிறந்த வீட்டுமனையை தேர்வுசெய்ய கூடுதல் இடங்களை வழங்குகிறது. உங்களுக்கு பிடித்த நிலம் தேர்வாகும் முன் பதிவு செய்யுங்கள்.
பணமதிப்பிலான பலன்கள்
தன் ஆரம்ப அல்லது துவக்க கட்டத்தில், புதிய வீடு வாங்குபவர் அல்லது முதலீட்டாளர்களுக்கு ஒரு வீட்டுமனை நல்ல விலை ஆதரவைக் கொண்டுள்ளது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் நிலத்தை அதன் தொடக்க கட்டத்தில் வாங்குகிறார்கள், ஏனெனில் அவர்கள் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களிடமிருந்து வாங்கும் ஒரு வீட்டுமனை அவர்களுக்கு சாதகமான விலையில் பெறலாம்.
இந்த கட்டத்தில், ரியல் எஸ்டேட் டெவலப்பர் முன்னுரிமை கொடுத்து வாங்குபவர்களுடன் பேரம் பேசத் தயாராக இருப்பார்கள். அவ்வாறாக நீங்கள் செய்ய இருக்கும் ஒப்பந்தம் உங்களுக்கு கணிசமான அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம், நீங்கள் அதை புத்திசாலித்தனமாக வேறு இடத்தில் முதலீடு செய்யலாம்.
மணிவே சிட்டி டெவலப்பர் நிறுவப்பட்டதிலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் ப்ளாட்டுகள் மற்றும் சுதந்திரமான வீடுகளை வழங்குவதன் மூலம் ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்தை உருவாக்கியுள்ளது.
எனவே இது அவர்களின் முதலீட்டை நீண்ட காலத்திற்கு சேமிக்கிறது.
சாத்தியமான வருமானம்
எந்த முதலீட்டாளர்களும்/வீடு வாங்குபவர்களும் ஒரு திட்டத்தையோ அல்லது அவர்களின் எதிர்காலத்தையோ மனதில் கொள்ளாமல் ஒரு இடத்தை வாங்குவதில்லை.
அவர்கள் தங்களுடைய சொத்து அல்லது வீட்டை ஒரு முதலீடாகப் பார்க்கிறார்கள், மேலும் ஏதேனும் ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்கள் முதலீட்டை விற்கத் திட்டமிடும்போது அவர்கள் ஒரு நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் உள்ள பெரும்பாலான மற்றும் நம்பகமான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிலத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் நன்மதிப்பு உயர அதை உருவாக்குகிறார்கள். ஏனெனில் அவர்கள் முதலீடு செய்யத் தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டு அந்த வீட்டுமனை இடங்களை உருவாக்குகின்றனர்.
எனவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்களை செல்வந்தர்களாக்கும் அந்த நிலத்தை கண்டுபிடிப்பதில், நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதை தவிர்க்காதீர்கள்.
எங்களின் அனைத்து Maniiway திட்டங்களும் டவுன்ஷிப்பின் வரம்பிற்கு அருகாமையில் அமைந்துள்ளன, எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவையான வீட்டுமனை இடங்களை குறுகிய காலத்திற்குள் அடைவதற்கு வழி வகுத்து, சந்தை நிலவரங்களைப் பொறுத்து உறுதியான வருமானத்திற்கு ஏற்றார் போல் அமைத்துத் தருகின்றனர்.
கால அவகாசம்
உங்களுக்கான சரியான இடத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அடுத்தது என்ன?...
உடைமை. நீங்கள் விரும்பிய இடத்தை யாரேனும் ஒரு பகுதித் தொகையை செலுத்தி உடைமையாக்கும் முன், நீங்கள் அந்த ரியல் எஸ்டேட் டெவலப்பரைச் சந்திக்க வேண்டும். உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரில் அந்த இடத்தை முன்பதிவு செய்ய குறைந்த கட்டணங்களை மட்டுமே வசூலிக்கின்றனர்.
உங்கள் விருப்பமான இடம் வேறொருவருக்கு விற்கப்படுவதற்கு முன்பு நீங்கள் உடைமை கொள்ள இதுவே சரியான வழியாகும்.
அப்போது நீங்கள் எங்களிடம் கேட்கலாம் கால அவகாசம் என்பது எது? இதற்கு என்ன பொருள்?...
உங்கள் சொத்தை முன்பதிவு செய்தவுடன் உங்களால் அலட்சியமாக இருந்து விட முடியாது. ரியல் எஸ்டேட் நிறுவனர்க்கு உங்கள் இடத்தினை பதிவு செய்ய தக்க ஆவணங்கள் மற்றும் முழுத் தொகையும் கட்ட நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
சில நிறுவனர்கள் குறைந்தபட்சம் 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிறகு பணம் செலுத்த அதிக நேரத்தை வழங்கலாம். உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்த சிலருக்கு குறைந்தபட்சம் ஒரு பகுதி கட்டணம் தேவைப்படலாம்.
கடன்கள் அல்லது பிற நிதிகளுக்கு ஏற்பாடு செய்ய உங்களுக்கு கால அவகாசம் தேவைப்படலாம். எங்களிடமிருந்து வீட்டுக் கடன் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு உதவ, மணிவே ஒரு சில பொது மற்றும் தனியார் துறை வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் நட்பில் கொண்டு உங்களுக்குத் தேவையான வீட்டுக்கடனை பெற்றுத்தரலாம்.
வங்கிகளின் நிர்வாகிகள் வாடிக்கையாளரின் தேவையைப் பொறுத்து சரியான வீட்டுக் கடன் தொகுப்பை வழங்குகிறார்கள், மேலும் வீடு அல்லது ப்ளாட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகள் என்றும் மேலோங்கியே இருக்கும்.
இவை அனைத்தும் மணிவேயின் வீட்டுமனை திட்டங்களில் இருந்து ஒரு இடத்தை வாங்குவதன் மூலம் நீங்கள் பெரும் நன்மைகள்.
எங்கள் குடியிருப்புகளை அவற்றின் இருப்பிடத்தில் பார்க்க ஆவலாக உள்ளீர்களா? உங்கள் அன்பான வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். நாங்கள் புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டங்களைப் பார்வையிட, தயவுசெய்து 📞 98423 29990 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது maniiwaycustomercare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.